விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூற படும் மிக சிலரில் முக்கியமானவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. சேனல் ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை இருந்து பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் இவர். முதலில் இவர் காபி வித் டிடி மற்றும் ஜோடி நம்பர் ஒன நிகழ்ச்சிகள் மூலமாக தான் பிரபலமானார்.

அதன் பின்னர் படி படியாக வளர்ந்து அன்புடன் டிடி மற்றும் தற்பொழுது நடத்தி வரும் என்கிட்டே மோதாதே நிகழச்சிகள் தவிர அவ்வப்பொழுது விருது விழாக்களையும் விஜய் அவார்ட்ஸையும் தொகுத்து வழங்கவும் செய்வார் டிடி. இந்நிலையில் இவருக்கு சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தனது இளம் வயதில் நள தமயந்தி மற்றும் விசில் ஆகிய படங்களில் நடித்தவர் சென்ற ஆண்டு தனுஷ் இயக்கிய பா பாண்டியில் ரீ இன்றி கொடுத்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கம் சர்வம் தாள மாயம் படத்தில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடித்துள்ளார் நம்ம டிடி.