தமிழில் கடைசியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். அதற்கு முன்னர் அவர் நடித்த படங்களான ஸ்பைடர் மற்றும் ஜெயா ஜானகி நாயகா ஆகிய படங்கள் படு தோல்வியை தழுவின. தெலுங்கில் ஒரு ஆண்டுக்கு முன் வரை முன்னணி நடிகையாக அணைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த ரகுல் திடீரென வரிசையாக பிளாப்கள் வரவும் கலங்கி போனார்.

யார்யான் என்ற ஹிந்தி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து இந்த வருடம் தான் ஐயாரி என்ற படத்தில் ஹிந்தியில் மீண்டும் நடித்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்த படமும் படு தோல்வியை தழுவியது. இருந்தாலும் அதற்கு பின் கூட அஜய் தேவ்கன் ஜோடியாக மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் ஒப்பந்தமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிதாக வாய்ப்புகள் வராது என்று புரிந்து விட்டதால் ஹிந்தியிலேயே செட்டிலாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளாராம் ரகுல். இதனால் ஹிந்தி வாய்ப்புகள் பொருட்டு ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். கிட்டத்தட்ட டூ பீஸ் பிகினி லெவலுக்கு சிறிய ஆடைகள் அணிந்தபடி இவர் செய்துள்ள அந்த சூடேற்றும் போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் ரகுல் ப்ரீத் சிங் கைவசம் சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் கார்த்தியின் தேவ் படங்கள் உள்ளன.