இஞ்சி இடுப்பழகி இலியானா ஒரு காலத்தில் தனது கட்டுடல் மேனியழகாலும், கவர்ச்சியான இடையாலுமே ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருந்தார். இவரது அதிரடி கவர்ச்சிக்காகவே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவரது கால்ஷீட்டுக்காக க்யூ கட்டி காத்திருந்த காலங்கள் உண்டு.

போக்கிரி மற்றும் தேவதாசு படங்களை அடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்களில், கிக் தவிர, முன்னா, ஆட்டா, கதர்நாத், என பல படங்களும் படு தோல்வியையே தழுவின. ஆனாலும் இவரது சிக் இடுப்புக்காகவே அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து புக் செய்ய ரெடியாக இருந்தனர்.

பல தோல்விகளுக்கு பிறகு பர்பி படத்தின் மூலம் பாலிவுட் நுழைந்த இலியானா, இப்பொழுது தான் அவரது காதலர் விவகாரங்கள் எல்லாம் தாண்டி, மீண்டும், பாத்ஷாஹோ, ரெய்டு, மற்றும் ரஸ்தம் என சில வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரது ஆசைக்கு ஏற்ப அவருக்கு மீண்டும் தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு, ரவி தேஜா நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தின் மூலமாக வந்துள்ளது. தெலுங்கில் நடித்து பல ஆண்டுகள் ஆகியும் கூட, இப்பொழுதும் இலியானா இரண்டு கோடிகள் சம்பளம் கேட்டும் கூட, அதை உடனே கொடுத்து, படு கவர்ச்சியாக நடிக்க புக் செய்து உள்ளனர் பட குழுவினர்.