இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் படத்தின் மூலமாக திரை உலகத்துக்குள் நுழைந்தவர் ஆங்கிலேய அழகி ஏமி ஜாக்சன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் இவர் தாண்டவம், தேவி ,கெத்து, தெறி மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஐ உட்பட பல படங்களில் நடித்தார்.

இது தவிர தெலுங்கிலும் எவடு படத்தில் சிரஞ்சீவியின் மகன் ராமச்சரனுடன் நடித்தார். பாலிவுட்டிலும் ஏக் தீவானா தா மற்றும் சிங் இஸ் பிளிங் ஆகிய படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் நடித்தார். இவர் அடிப்படையில் ஒரு உள்ளாடை மாடலாக பிரிட்டனில் இருந்தவர் ஆவார்.

ஏமி ஜாக்சன் பல காலமாக ஒரு தொழிலதிபரை டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அந்த நபருடன் பல இடங்களில் படு கவர்ச்சியான உடைகளிலும், மிக மிக நெருக்கமாகவும் பலமுறை காணப்பட்டார் ஏமி. இந்நிலையில் சமீபத்தில், நீலம் கில் என்ற மாடலுடன் ஏமி நெருக்கமாக இருந்த ஒரு புகைப்படம் வந்தது. அதில் நீலம் கில்லை தன கணவன் என்று கூறியிருந்தார் ஏமி. இதே போலவே நீலம் கில்லும் மனைவியுடன் என்று கூறி ஏமியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை போட்டிருப்பதால் ஏமி ஜாக்சன் ஒரு லெஸ்பியன் என்று செய்தி பரவி வருகிறது.