நடிகை திரிஷா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவருக்கு அடுத்து நடிக்க வந்த தமன்னா காஜல் அகர்வால் போன்றோர் எல்லாம் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நிலையில் கூட இவர் ஐம்பது படங்கள் தாண்டி வெற்றி பயணம் சென்று கொண்டிருக்கிறார் சினிமாவில்.
த்ரிஷாவின் நடிப்பை தவிர அனைவராலும் அறியப்பட்டது அவரது நல்ல மனதும் உதவும் குணமும். நாய்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட த்ரிஷா பலருக்கும் பொருளாதார ரீதியாகவும் பல உதவிகள் செய்து வருகிறார். பல ஏழை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிகள் செய்து வரும் த்ரிஷா சென்ற ஆண்டு யுனிசெப் அமைப்பால் தங்களது அமைப்பின் செலிபிரிட்டி தூதராக அறிவிக்கப்பட்டார்.
இன்று யுனிசெப் தூதராக அவர் குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து ஒரு பேரணி ஒன்றை தொடங்கி வைத்தார். இதில் பேசிய த்ரிஷா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார். த்ரிஷா அடுத்ததாக மோஹினி மற்றும் கர்ஜனை படங்களில் நடித்து வருகிறார்.