

சித்தார்த் மற்றும் நித்யா மேனன் நடித்த நூற்றெண்பது படத்தை இயக்கிய ஜெயேந்திர தான் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் தமன்னா மீரா என்ற ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். மேலும் இவர் கதாநாயகனை கற்பனையிலேயே காதலித்து கைப்பிடிக்க முயலும் பெண்ணாக அழகாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நா நுவ்வே படமோ நல்ல விமர்சனங்களை பெறவில்லை.

அரைத்த பழைய கதை மற்றும் மொக்கையான போர் அடிக்க கூடிய ஸ்க்ரீன்ப்லே என்று படத்தை விமர்சித்தவர்கள் பலரும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். இந்த படத்தில் அதிரடியாக தன தொடையழகை காட்டி சல்சா நடனம் எல்லாம் ஆடியும் கூட படம் ஓடவில்லையே என தமன்னா வருத்தத்தில் உள்ளாராம். அடுத்த படமான தட் இஸ் மஹாலக்ஷ்மி ஆவது வெற்றி பெறுமா பார்க்கலாம்.