

கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலி பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையாமல் முடங்கி போயிருந்தார். இது போக நடிகர் ஜெய்யுடன் காதல் என்று கிசு கிசு வேறு. இந்நிலையில் தான் அஞ்சலி திடீரென எடையை குறைத்து சிக்கென்று ஆனார்.

இதனை தொடர்ந்து நாடோடிகள் இரண்டாவது பாகம் உட்பட சில படங்களில் நடிக்க கமிட் ஆன அஞ்சலி, அடுத்ததாக மூன்று பேய் படங்களில் நடிக்க உள்ளார். லிசா என்ற பேய் படத்தில் நடிக்க உள்ள அஞ்சலி ,அடுத்ததாக ஓ என்ற ஹாரர் படத்திலும், கீதாஞ்சலி இரண்டாவது பாகம் படங்களிலும் பேயாக நடித்து மிரட்ட உள்ளார் அஞ்சலி.