

இந்நிலையில் தான் சென்ற ஆண்டு விஜய் டீவியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் ரியாலிட்டி கேம் ஷோவில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க ஓவியா ஒரு போட்டியாளராக சென்றார். அந்த வீட்டில் பல சுவாரசியமான நிகழ்வுகள், சண்டைகள், அழுகைகள், காதல், மோதல், கோபம் என பலவும் ஓவியாவை வைத்து நடக்க, அவர் தான் பட்டத்தை வெல்வார் என்று நினைத்த போது வெளியேறினார்.

இந்த ஆண்டு இரண்டாவது சீசனில் அவர் வருவது போல காட்ட பட்டது. பதினேழாவது மற்றும் சர்ப்ரைஸ் போட்டியாளர் என்று ஓவியா காட்டப்பட அவர் பிக் பாஸ் வீட்டினுள் சென்றார். ஆனால் அவரது பேட்டி வித்தியாசமாக இருக்கவே அதை வைத்து திறந்து பார்த்ததில் அவர் ஒரு கெஸ்ட்டாக தான் உள்ளே வந்தார் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விட்டனர். மற்றவர்கள் கண்டு பிடித்ததால் ஓவியா முதல் நாளே ஹவுஸை வீட்டை அனுப்ப பட்டார். இந்நிலையில் மீண்டும் ஓவியாவை பார்க்கலாம் டீவியில் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.