

இப்பொழுது அந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பிரபுவும் மோகன்லாலும் மீண்டும் ஒன்றாக ஒரு படத்தில் தோன்றவுள்ளனர். ஆச்சர்யமான ஒரு தற்செயல் என்ன என்றால் இந்த படத்தை இயக்க இருப்பதும் சிறைச்சாலை படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் தான். மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்மம் என்ற அந்த படம் சுதந்திர போராட்ட காலங்களில் நடக்கும் கதை ஆகும்.

இந்த படம் நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் துவங்க உள்ளது. இந்த படத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்ன என்றால் சமீபத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன மோஹன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால் இந்த படத்தில் இளம் வயது மோஹன்லாலாக நடிக்க உள்ளார். பிரபு தவிர இந்த படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டாரான நாகர்ஜுனா மற்றும் ஹிந்தி நடிகரான சுனில் ஷெட்டியையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.