மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நகைச்சுவை படமான நானும் ரவுடிதான் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல் முறையாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பல தோல்வி படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக்காகவும், விக்னேஷ்  சிவனுக்கு முதல் வெற்றியாகவும் அமைந்தது.



இந்த படத்தின் போது தான் நயனும் விக்கியும் காதலிக்க துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயனும்  விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் ஒன்றாக வரவுள்ளார். டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படமான இமைக்கா  நொடிகள் படம் தான் அது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு புலனாய்வு அதிகாரியாக நடிக்க விஜய் சேதுபதி அவரது கணவராக ஒரு  வேடத்தில் நடித்துள்ளார்.

Image result for nayantara and vijay sethupathi

படத்தில் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியின் காட்சிகள் படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் என்றும் மிகவும் எமோஷனலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தவிர பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும், அதர்வா நயனின் தம்பியாகவும் நடித்திருக்கும் இந்த படம், அடுத்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி திரைக்கு வரவுள்ளது. 


Find out more: