

சலோ படத்தில் அறிமுகம் ஆன ராஷ்மிகாவுக்கு முதல் படியே வெற்றி தான். சலோ படம் வெற்றி அடைய அதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படத்திலும் நாணி மற்றும் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

இதுவரை க்யூட்டான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ராஷ்மிக்கா அடுத்ததாக ஒரு அதிரடியான காவல் துறை அதிகாரியாக தனது அடுத்த கன்னட படத்தில் நடிக்க உள்ளார். கவுதம் அய்யர் இயக்கம் அந்த படத்தில் தனது முதல் கேஸை வெற்றிகரமாக முடிக்கும் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடிக்க உள்ளார்.