

ஆனால் அந்த வெற்றி படங்களுக்கு பின்னர் அவர் சறுக்க தொடங்கினார். அவர் ராம் ஜோடியாக நடித்த படமான உண்ணாதி ஒக்கடே சிந்தகி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கு அடுத்ததாக இவர் நடித்த படமான க்ரிஷ்ணார்ஜுன யுத்தம் படமும் படு தோல்வியை அடைந்தது. இந்த படங்களின் தோல்வியால் துவண்டு போன அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக கன்னட திரை உலகுக்கு தாவி விட்டார்.

கன்னட பவார் ஸ்டார் ஆன புனீத் ராஜ்குமார் நடிக்க உள்ள அடுத்த படமான நடசர்வ பாவுமா படத்தில் அனுபமா பரமேஷரான் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ரசிதா ராம் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார் என்றாலும் அனுபமாவுக்கு தான் பிரதான வேடம் என்று சொல்ல படுகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு ஜுனியர் வக்கீலாக நடிக்க உள்ளாராம்.