

ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் திரை உலகில் தல அஜித் ஜோடியாக பில்லா இரண்டாம் பாகத்தில் நடித்திருக்க வேண்டிய ஹுமா குரேஷி இந்த ஆண்டு தான் தமிழில் காலடி எடுத்து வைத்தார். அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி சென்ற மாதம் வெளியான காலா படத்தில்.

இந்த படத்தில் ரஜினியின் முன்னாள் காதலி சரினாவாக நடித்து அசத்தியவருக்கு அடுத்ததாக தெலுங்கில் விக்டரி வெங்கடேஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து இப்பொழுது மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் வரலாற்று படமான சை ரா படத்தில் நடிக்க ஹுமா குரேஷியை அணுகியுள்ளனர் அப்பட குழுவினர். இந்த படத்தில் ஏற்கனவே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் தமன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.