

ஆனால் இதற்கு பின்னர் இவர் நடித்த படங்களான உள்குத்து, புலி ,மற்றும் பல படங்கள் தோல்வி அடையவே தெலுங்கிற்கு சென்றார் நந்திதா. தெலுங்கில் இவர் அறிமுகமான படமான இக்கடிக்கி போத்தாவு சின்னவாடா படம் வெற்றி பெறவே இப்பொழுது அங்கு ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் தமிழில் வெற்றி பெறவில்லையே என்று வருத்தத்தில் இருந்தவருக்கு ஆறுதலாக வந்துள்ளது இன்று வெளியாகியுள்ள அசுரவாதம் படம். நடிகர் சசிகுமார் ஜோடியாக நந்திதா நடித்துள்ள இந்த படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் தனக்கு நீண்ட நாட்கள் கழித்து தமிழில் ஒரு ஹிட் அடித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் நந்திதா.