

சிவ கார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் மற்றும், விஷாலின் சண்டக்கோழி இரண்டாம் பாகம், விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் ஆகிய சில பெரிய படங்களில் நடித்து வரும் கீர்த்தி தெலுங்கில் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மஹாநடி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறக்குமா இப்படி என்று பார்த்ததில் அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. மஹாநடி படத்திற்கு பிறகு கீர்த்திக்கு வந்த பெரும்பாலான பாத்திரங்கள் கவர்ச்சி காட்டி கதாநாயகனை சுற்றி சுற்றி வந்து காதலித்து டூயட் பாடும் வழக்கமான கதைகள் தானாம்.

மேலும் தன்னால் கவர்ச்சியான வேடங்களிலோ இல்லை முத்த காட்சிகளிலோ கண்டிப்பாக நடிக்க முடியாது என்ற கண்டிஷனும் போட்டு இருப்பதால் கீர்த்தியை தேடி தெலுங்கு இயக்குனர்கள் யாருமே வருவதில்லையாம். இருந்தாலும் ராஜமவுலி மஹாநடி நடிப்பை கண்டு வியந்து கீர்த்தியை அவரது அடுத்த பட நாயகியாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.