

அதிசயம் என்னவென்றால் சிம்பு தினமும் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வந்து படத்தில் தனது பாகங்களையும் நேரத்திற்கு முடித்து கொடுத்து விட்டது தான். இப்பொழுது செக்க சிவந்த வானம் இரண்டு மாதங்களில் வெளியீடுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் சிம்பு இப்பொழுது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அதில் ஒன்றாக சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தாயாரிப்பில் வெளியாக உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும், இது எந்த படத்தின் அடுத்த பாகமும் இல்லை, இது ஒரு முற்றிலும் புதிய கதை என்றும் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு சிம்புவின் அதிரடி என்று பெயர் வைத்துள்ளதாகவும் இதன் டேக்லைனாக "எ வெங்கட் பிரபு ஆக்ஷன்" என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.