

இப்படங்களை தொடர்ந்து சமீபத்தில் தனக்கு உதயம் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து ஆபிசர் என்ற படத்தில் நடித்தார். நாகர்ஜுனா காவல் துறை அதிகாரியாக நடித்த இந்த படம் வெளியான இரண்டாம் நாளே பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக நாகார்ஜுனா நானியுடன் இனைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார். இந்த படத்திற்கு தேவதாஸ் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால் நாகர்ஜூனாவின் தந்தை ஆகிய அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்கள் நடித்த ஒரு பழைய பிளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு தான் தேவதாஸ். இந்த படத்தில் நாகர்ஜுனா ஒரு டான் ஆகவும் நாணி ஒரு டாக்டராகவும் நடித்துள்ளனர்.