

இந்த படத்தில் ரஜினியின் வில்லியாக நீலாம்பரி என்ற துணிச்சலான மற்றும் திமிரான கதாபாத்திரத்தில் ரஜினிக்கு சமமாக நடித்து ஒரு புதிய ரசிகர் பட்டாளத்தையே குவித்தார். இதன் பின்னர் கூட இவர் பல படங்களில் நடித்தாலும் எந்த படமும் அவ்வளவாக எடுபடவில்லை. இந்நிலையில் தான் வெளியானது ராஜமவுலி இயக்கிய பாஹுபலி படம். இந்த படத்தில் மிக முக்கியமான பாத்திரமான ராஜமாதா சிவகாமியாக வாழ்ந்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படம் தான் சைலஜா ரெட்டி அல்லுடு. இந்த படத்துல நாக சைதன்யாவின் அத்தையாக நடிக்க உள்ளார் ரம்யா கிருஷ்ணன். மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யா நடித்த கதாபாத்திரத்தை போலவே ஒரு திமிரான பாதையாக நடிக்க உள்ளார் ரம்யா இந்த படத்தில். இவரது மகளாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது.