

மேலும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்கு இசை அமைத்துள்ள ஜிப்ரான் கூட இந்த திறமையான பாடகரை காண வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நெட்டிசன்கள் அனைவரும் இந்த பாடகரை அடையாளம் கண்டு பிடித்தனர். அவர் கேரளத்தை சேர்ந்த ராகேஷ் உன்னி என்று கண்டுபிடிக்க பட்டது.

இந்நிலையில் இன்று ராகேஷ் உண்ணியை அடையாளம் கண்டு பிடித்து அவரை உலகநாயகன் கமலிடம் கொண்டு சேர்த்து விட்டார்கள். இன்று நடிகர் கமல் ஹாசன் ராகேஷ் உண்ணியை சந்தித்து உரையாடி அவரை மகிழ்வித்தார். ராகேஷ் உன்னியும் கமல் முன்னரே அந்த பாடலை பாடி தன வாழ்நாளில் ஒரு சிறந்த அனுபவத்தை பெற்றார். கூடிய விரைவில் ராகேஷ் உன்னி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்க படுகிறது.