

அந்த உருக்கமான பதிவில் சோனாலி தனது குடும்பத்தார் தனக்கு ஆதரவை இருப்பதாகவும் தான் முடிந்த வரையில் கேன்சருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இன்னும் என்ன வகை கேன்சர் என்று அறியப்படாத நிலையில் சோனாலி பிந்த்ரே இப்பொழுது நியூ யார்க்கில் கேன்சர் சிகிச்சை பெற்று வருகிறார். சோனாலி பிந்த்ரே பல ஹிந்தி படங்களிலும் தமிழில் காதலர் தினம் படத்திலும் ,தெலுங்கில் முராரி, இந்திரா, மன்மதுடு ஆகிய சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.