நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் தெலுங்கில் நடித்த படமான மஹாநடி படத்தில்  நடிகை சாவித்ரி ஆக நடித்து பேரும் பேரும் புகழும் பெற்றார். தமிழில் தற்பொழுது விஷாலுடன் சண்டக்கோழி இரண்டாம் பாகம், ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் சாமி ஸ்கொயர் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Image result for keerthy suresh apherald

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் சர்ச்சை நாயகன் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் அதிரடியான படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக அறிவிக்க பட்டது. இந்நிலையில் இந்த படக்குழு இப்படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க அணுகினார்களாம்.

Image result for keerthy suresh apherald

ஆனால் சிம்பு படம் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருக்கும், மேலும் சிம்பு படம் என்றால் சர்ச்சை கண்டிப்பாக வரும், படமும் வெளியாக தாமதம் ஆகும் என்றும் கூறி கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூற படுகிறது. 


Find out more: