

அது மட்டும் அல்லாமல் திருமணம் ஆன நடிகைகள் வைத்து படம் எடுத்தால் ஓடாது என்ற மூட நம்பிக்கையையும் பொய்யாக்கியுள்ளார். ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்த சமந்தா அடுத்ததாக மஹாநாடி படத்தில் எண்பதுகளில் வாழும் ஒரு பத்திரிகையாளராக அவதாரம் எடுத்து அதிர வைத்தார். விஷாலுடன் நடித்த இரும்புத்திரை படத்தில் மனோதத்துவ நிபுணராக க்யூட்டான வேடத்தில் நடித்த சமந்தா அடுத்ததாக இன்னொரு அதிரடி செய்ய உள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்த கிரிசய்யா இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த படத்தில் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் தனது புதிய அவதாரமாக சமந்தா ஒரு டாக்சி டிரைவராக நடித்து கலக்க உள்ளார்.