

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் மலையாள பட உலகில் நடிகர் மோகன்லாலின் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்தி வந்தது. நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகும் லூசிபர் படத்தில் தான் அவர் அறிமுகம் ஆக உள்ளார். அதற்குள் அவர் கன்னட பட உலகுக்குள்ளும் நுழைந்து விட்டார்.

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் படமான ரஸ்தம் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே விவேக் ஓபராய் தெலுங்கிலும் நடிகர் ராமச்சரனின் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக நடித்து வந்த விவேக் ஓபராய் இன்று அணைத்து மொழிகளிலும் வில்லனாக நடித்து வருகிறார்.