

இந்நிலையில் அவர் அடுத்ததாக ரோஷன் ஆண்டிரூஸின் இயக்கத்தில் காயம்குளம் கொச்சுண்ணி என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று திரைப்படமான இந்த படத்தில் நிவின் பாலி கேரளத்தை சேர்ந்த ஒரு ராபின் ஹூட் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜாக்கெட் அணியாமல் நடிக வேண்டும் என அமலா பால் இந்த படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாள முன்னணி நாயகன் மோகன்லால் இந்த படத்தில் இத்திக்கார பாக்கி என்ற வேடத்தில் நிவின் பாலியின் குருவாக நடித்துள்ளார். இந்த படம் ஓணம் சிறப்பு படமாக வெளியாக உள்ளது. காயம்குளம் கோச்சுண்ணி பட குழுவினர் இந்த படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழ் தலைப்பாக மலைக்கள்ளன் என்று எம்ஜிஆர் நடித்த பழைய பட டைட்டிலை வைக்க யோசித்து வருகின்றனர். அந்த டைட்டில் கிடைத்து விட்டால் நிவின் பாலி தமிழில் மீண்டும் வருவார் மலைக்கள்ளனாக!