

இந்த படத்தை கற்றது தமிழ், தங்கமீன்கள், மற்றும் தரமணி படங்களை இயக்கிய ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தங்கமீன்கள் சாதனா மற்றும் அஞ்சலி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மம்மூட்டி இந்த படத்தில் வாத நோயால் பாதிக்க பட்ட குழந்தையுடன் வாழும் ஒரு தந்தை வேடத்தில் நடித்து கலக்கியுள்ளார்.

இன்று நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமல்லாமல் மம்மூட்டியின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார். பல திரைப்பட விழாக்களில் பாராட்ட பட்ட பேரன்பு மம்மூட்டிக்கு மீண்டும் ஒரு முறை தேசிய விருது பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.