

இவர் துருவ் விக்ரமின் தந்தை சீயானுக்கு பிதாமகன் மூலம் தேசிய விருது வாங்கி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் துருவ் ஜோடியாக புதுமுகம் மேகா சவுத்ரி நடித்து வருகிறார். இந்நிலையில் முதல் படம் வெளியாகும் முன்னரே துருவ் தெலுங்கில் கால் பாதிக்க வாய்ப்பு அமைந்துள்ளது.

முன்னணி தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா சமீபத்தில் பீடா படத்தின் மூலம் சில தோல்வி படங்களுக்கு பிறகு ஒரு கம்பேக் கொடுத்தார். அவரது அடுத்த படத்தில் துருவ் விக்ரமை நடிக்க வைக்க சேகர் முயற்சி செய்து வருகிறாராம். டான்ஸ் சம்பந்தப்பட்ட படமான இந்த படத்தில் நடிக்க துருவ் ஒத்துக்கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.