

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா ஒரு மிடில் க்ளாஸ் பெண்ணாகவும் வறுமையின் காரணமாகவும் சூழ்நிலைகளாலும் போதை பொருளை கடத்தி செல்லும் பெண்ணாகவும் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நயனை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் காமெடியன் யோகி பாபு நடித்துள்ளார்.

இந்நிலயில் இந்த படத்தை பற்றி இயக்குனர் நெல்சன் கூறுகையில் இந்த படத்தில் நான்கு பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்தார்கள் என்றார். ஒருவர் இந்த படத்தின் ஹிட் பாடலான கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி பாடலை எழுதிய நடிகர் சிவ கார்த்திகேயன். அடுத்ததாக மற்ற பாடல்களை எழுதிய நயனின் காதலர் விக்னேஷ் சிவன் விவேக் மற்றும் நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் சம்பளம் வாங்காமலே பணியாற்றியதாக நெல்சன் கூறியுள்ளார். கோலமாவு கோகிலா ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.