

சென்ற ஆண்டின் தொடக்கம் வரை தெலுங்கு திரை உலகில் கொடி கட்டி பறந்து வந்தவர் இவர். கிட்டத்தட்ட அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தெலுங்கின் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தை பெற்று இருந்தவர் சென்ற ஆண்டில் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடையவே பின்னுக்கு தள்ளப்பட்டார். அதிலும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஜோடியாக நடித்த ஸ்பைடர் படம் படு தோல்வி அடைந்ததடி தொடர்ந்து இவர் ராசியில்லாத நடிகை என்று கூட கூறப்பட்டார்.

இந்நிலையில் தான் இவரை தேடி ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் படமான என்.டி.ஆர் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இயக்குனர் க்ரிஷ் இயக்கி வரும் இந்த படத்தில் பாலகிருஷ்ணா அவரது தந்தை என்.டி.ராமாராவாக நடிக்க, ரகுல் ப்ரீத் சிங் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவியின் வேடத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த வேடத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒத்துக்கொள்வாரா என்று பார்க்கலாம்.