

இதனை தொடர்ந்து அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது விஜய் டீவியில் கமல்ஹாசன் நடத்திய நிகழ்ச்சியான பிக் பாஸ். சென்ற ஆண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா அங்கு ஒரே வீட்டில் தன்னோடு போட்டியாளராக கலந்து கொண்ட ஆரவை காதலிக்க தொடங்கினார். பல சர்ச்சைகள் மற்றும் சண்டைகளுக்கு பின்னர் ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் மக்களின் ஆதரவு அவருக்கு வெகுவாக இருந்தது.

நிகழ்ச்சியின் போது தான் ஓவியாவை காதலிக்கவில்லை என்று கூறிய ஆரவ் இப்பொழுது ஓவியாவுடன் லிவிங் டுகெதர் என்று கூறப்படுகிறது. தி நகரில் வீடு வைத்திருக்கும் ஆரவ் எப்போதும் ஓவியாவின் ஓ.எம்.ஆர் இல்லத்தில் தான் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கோ அல்லது விருது விழாக்களுக்கோ சென்றாலும் கூட இருவருமே ஒன்றாகவே செல்வது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் இருவரிடமும் கேட்டாலோ அவர்கள் இன்னும் நல்ல நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் கிடையாது என்றே கூறி மழுப்புகின்றனர். எது எப்படியோ ஓவியாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியால் படங்கள் எதுவும் அமையவில்லை அட்லீஸ்ட் ஆரவின் காதலாவது கிடைத்தால் சரி.