

இந்நிலையில் இன்று இந்த படத்தில் ரஜினியின் கதாநாயகியாக சிம்ரன் நடிப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அவர் டேராடூனில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஆனா நவாஸுதீன் சித்திக்கியும் இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் தோன்ற உள்ளார் என்றும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடிகர் சனத்தின் ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் சானதும் பாபி சிம்மாவும் ரஜினியின் மகன்களாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு கல்லூரியின் பின்னணியில் நடக்கும் ஒரு கொலை பற்றிய துப்பறியும் கதை என்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு பேராசிரியராக நடிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்க படுகிறது.