

மீண்டும் வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனுடன் இனைந்து ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து பாராட்டுகளை பெற்றவர், அதனை தொடர்ந்து டைம் மெஷின் பற்றிய படமான இன்று நேற்று நாளை படத்தின் மூலமாக ஹிட் கொடுத்தார். இதற்கு பின்னர் அவரே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து முதல் படமாக எழில் இயக்கத்தில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்தார்.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பெரும் வெற்றியை அடைந்தது. இதற்கு பின்னர் இவர் நடித்த சில படங்களான மாவீரன் கிட்டு ,கதாநாயகன் ஆகிய படங்கள் படு தோல்வியை அடைந்தன. என்றாலும் கூட விடா முயற்சியுடன் நடித்து வரும் அவர் அடுத்ததாக நடிகர் தனுஷ் உடன் இணைய உள்ளார்.

தனுஷ் அடுத்ததாக தனது வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்க உள்ள ஒரு படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த எதிர்பார்க்காத காம்பினேஷன் வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.