

அவர் பெரிதும் எதிர்பார்த்த பெரிய படங்களான பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த அங்யாதவாசி படமும், அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா படமும் கூட எதிர்பாராத விதமாக தோல்வியை அடைந்தன. இடையில் இவருக்கு ஒரே ஒரு ஹிட் என்றால் அது இவரது முதல் தமிழ் படமான துப்பறிவாளன் தான்.

இந்நிலையில் இவர் தற்பொழுது நாக சைதன்யாவுடன் நடித்துள்ள சைலஜா ரெட்டி அல்லுடு படத்தை தான் பெரிதும் நம்பி உள்ளார். இந்த படத்தில் அனு இம்மானுவேலின் தாயாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க மாப்பிள்ளை ரஜினிகாந்த் போல தன் அத்தையை எதிர்த்து ஜெயிக்கும் மாப்பிள்ளை வேடத்தில் நாங்க நடித்துள்ளார். பார்க்கலாம் இந்த படம் ஆவது அனு இம்மானுவேலின் கேரியரை காப்பாற்றுமா என்று.