அடிக்கடி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றும் அமலா பால் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பல முன்னணி நடிகர் நடிகைகள் போல அமலா பாலும் பிசினஸில் இறங்கி விட்டார். நைட் ரெகவரி என்ற மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை பானம் ஒன்றை அவர் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளார்.
இவர் அடிக்கடி இமயமலைக்கு சென்ற போது இவர் இதனை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார். அமலா பால் அடுத்ததாக தமிழில் அதோ அந்த பறவை போல படத்திலும் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இவரது முதல் பாலிவுட் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.