சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்ட்டரில் விஜய் தேவரைகொண்டஆவின் முதுகில் அமர்ந்து வருவது போல இருந்தது. இந்த போஸ்டரை வைத்து பலரும் ராஷ்மிகாவை கலாய்த்து வந்தனர். ராஷ்மிக்கா மந்தான்னா தனது முதல் பட கதாநாயகனான ரக்ஷித் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயம் ஆனவர் ஆவார்.
இதனால் ட்விட்டர் நெட்டிசன்கள் அனைவரும் திருமணம் ஆகா உள்ள நிலையில் எதற்காக விஜயுடன் நெருக்கமாக நடிக்கிறீர்கள் என்று ராஷ்மிகாவை கலாய்க்கவே அவர் பொங்கிவிட்டார். இவ்வாறு தன்னை கலாய்ப்பதாக நினைத்து கொச்சையாக பேசியவர்களை பதிலடி கொடுத்துள்ளார்.
திருமணம் நிச்சயமான நடிகை வேறு நாயகர்களுடன் நெருக்கமாக நடித்தால் கேட்கும் நீங்கள் திருமணம் ஆன கதாநாயகர்கள் நாயகிகளுடன் நெருங்கி நடித்தால் கேட்டதுண்டா என்று ராஷ்மிக்கா நறுக் கேள்வி கேட்டு கலாய்த்தவர்களை வாயடைத்துள்ளார்.