

இத்தனைக்கும் பிறகு ஹிந்தியில் முன்னணி நாயகனான ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக மொஹஞ்ஜோதாரோ படத்தில் நடித்தார். இந்த படமும் பெரிய எதிர்பார்ப்போடு வந்து படு தோல்வியை தழுவியது. நடித்த எல்லா படங்களும் தோல்வி அடைந்ததால் அவர் ராசியில்லாத நடிகை என்று கூறப்பட்டார்.

ஆனால் அவர் அடுத்ததாக படு கவர்ச்சியாக டூ பீஸ் பிகினியில் நடித்த துவ்வாடா ஜெகந்நாதம் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பல படங்கள் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் கடைசியாக அவர் நடித்து வந்த படமான சாக்ஷ்யம் படு தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் பூஜா அழகாக இல்லை என்றும் கூறப்பட்டது.

இதனால் குழப்பமான இவரது அடுத்த படக் குழுவினர் இவருக்கு டெஸ்ட் ஷூட் வைத்து தான் ஷூட்டிங் போக வேண்டும் என்று கூறி விட்டனராம். பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தில் டெஸ்ட் ஷூட் க்ளியர் செய்த பின் தான் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.