தமிழிலும் நூற்றெண்பது உள்ளிட்ட பல படங்களில் நடித்து பார்த்தார். இங்கும் அவர் நடித்த எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. பெரிய நடிகர்களுக்கு ஜோடியாகவும் அவர் நடித்தார். சூர்யா ஜோடியாக இருபத்தி நான்கு படத்திலும் விக்ரமுடன் இருமுகன் படத்திலும் நடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெலுங்கில் ஆவ் படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக பிராணா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் தான் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நித்யா மேனன் தனக்கு தல அஜித்தை பிடிக்கும் என்றும் அவருடன் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். பார்க்கலாம் அடுத்த அஜித் படத்தில் நித்யா மேனனுக்கு அந்த வாய்ப்பு அமையுமா என்று.