

இதன் பின்னர் இவர் நடித்த படங்களான பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் தெலுங்கில் அறிமுகம் ஆன படமான மெண்டல் மதிலோ ஆகிய படங்களும் படு தோல்வியை அடைந்தன. இந்நிலையில் இவருக்கு முதல் ஹிட்டாக ஸ்பேஸ் படமான டிக் டிக் டிக் அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நிவேதா பெத்துராஜ் தனக்கு வரும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் வாய்ப்பு வரவில்லை என்றால் துபாய் போய் செட்டிலாகி விடுவேன் ஒழிய வாய்ப்பு பிச்சை எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். நிவேதா பெத்துராஜ் அடுத்ததாக திமிரு புடிச்சவன் ,பொன் மாணிக்கவேல் மற்றும் வான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.