

அந்த படத்தின் நீலாம்பரி வேடத்தை அடுத்து ரம்யா கிருஷ்ணனுக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றால் அது ராஜமவுலி இயக்கிய பாஹுபலி படத்தின் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரம் தான். தமிழில் இந்த ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் தேவ் படத்திலும், தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் சைலஜா ரெட்டி அல்லுடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் புதியதாக ஒரு படம் துவனப்பட்டுள்ளது. பாகுபலியின் புகழை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்காக படத்துக்கு ராணி சிவகாமி என்று பெயரிட்டுள்ளனர். பார்க்கலாம் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் சிவகாமியாக கலக்குவாரா என்று.