

பல படங்களும் போடாமலும் சரியான வாய் அசைப்பு இல்லாத காரணத்தாலும் இவரது கேரியர் மிகவும் டல்லாகவே சென்றது. இருந்தாலும் தனது கொழுக் மொழுக் தேகத்தாலும் படு கவர்ச்சியான நடனங்களாலும் ரசிகர்களை பெற்றிருந்த ஹன்சிகா சிம்புவுடனான ப்ரேக்கப்பின் பிறகு தனது எடையை பரவலாக குறைத்து வந்தார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் இவரது கதாபாத்திரத்தை மையமாக வைத்த ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹன்சிகாவின் பிறந்தநாளான ஆகஸ்டு ஒன்பதாம் தேதி வெளியிட பட உள்ளது. ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான இந்த படத்தின் முதல் போஸ்டரை ஹன்சிகாவின் முதல் ஹீரோவான தனுஷ் வெளியிட உள்ளார்.