

நேற்று காலை முதலே ரஜினிகாந்த் கமல் ஹாசன் தல அஜித் சிவ கார்த்திகேயன் தனுஷ் விஜய் சேதுபதி விஷால் வடிவேலு என பல நட்சத்திரங்களும் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தினர். இந்நிலையில் நேற்று தனது அஞ்சலியை செலுத்த முடியாது போன நடிகை த்ரிஷா இன்று மெரினா சென்றார்.

தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் சென்று கருணாநிதியின் சமாதியில் மலர்கள் தூவி மாலையிட்டு அதனை சுற்றி வந்து அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

இதன் பின்னர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவருக்கு எனது வணக்கம் என்றும் அவரது அன்பையும் அரவணைப்பையும் என்றும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். கடைசியாக மோகினி படத்தில் நடித்த த்ரிஷா அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக 96 படத்தில் நடித்துள்ளார்.