நடிகர் சிம்பு தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் ,வெங்கட் பிரபுவின் மாநாடு என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ள அடுத்த படமான தெலுங்கு பிளாக்பஸ்டர் அதாரின்டிக்கி தாரெதி படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளதாக செய்திகள் வளம் வர துவங்கி உள்ளன.

Image result for hansika and STR

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் சமந்தா நடிக்க த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய அந்த படம் அங்கே மாபெரும் வெற்றியை பெற்றது. இப்பொழுது தமிழில் சிம்பு நடிக்க இந்த ரீமேக்கை இயக்குனர் சுந்தர்.சி இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. சுந்தர்.சியின் கடைசி சில படங்களில் ஹன்சிகா தான் கதாநாயகி.

Image result for hansika and STR

இந்த படத்திலும் ஹன்சிகா சிம்புவின் ஜோடியாக நடிப்பாரா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே சிம்பு நயந்தாராவை விட்டு பிரிந்த பின்னர் இது நம்ம ஆளு படத்தில் நடித்தது போல சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் பிரிவுக்கு பின்னர் வாலு படத்தை அடுத்து இந்த படத்தில் நடிப்பார்களா என்று பார்க்கலாம். 


Find out more: