ராசியில்லாத நடிகை என்ற கிட்டத்தட்ட முத்திரை குத்தப்பட்ட ஒரு நிலையில் அவரது அதிர்ஷ்டத்தை மாற்றி போட்டது சமீபத்தில் வெளியான விண்வெளி படமான டிக் டிக் டிக். ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்த டிக் டிக் டிக் படம் யாருமே எதிர்பாரா வண்ணம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு புடிச்சவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மடோனா என்ற காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் இந்த படத்திற்காக புல்லட் ஓட்ட கற்று வருகிறாராம்.
இந்த படத்தில் பல காட்சிகளில் புல்லட்டில் வலம் வரும் விதமாக காட்சிகள் உள்ளனவாம். பார்க்கலாம் கவர்ச்சியுடன் ஆக்ஷனிலும் கலக்குவார் புல்லட் ராணி நிவேதா என்று.