

விபரி மீடியா தயாரிக்க உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் வாய்ப்பு விஜய்க்கு அமைந்துள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று துவங்கி பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

சென்ற ஆண்டே ஜெயலலிதா வாழ்க்கை படம் எடுத்து அதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் ஏனென்றால் அவர்தான் நீலாம்பரி மற்றும் ராஜமாதா சிவகாமி தேவி என சிறப்பான பெண் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியுள்ளார் என்று ஒரு பேச்சு நிலவியது. நடிகை த்ரிஷாவும் அடிக்கடி தான் ஜெயலலிதாவாக நடிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்று கூறியிருந்தார். நயன்தாராவோ திடீரென கோலமாவு கோகிலா ப்ரமோஷனின் போது தனக்கும் ஜெயலலிதாவாக நடிக விருப்பம் என்றுள்ளார். பார்க்கலாம் விஜய் யாரை தேர்வு செய்கிறார் என்று.