

இந்த படங்களின் இசை பிரபலம் ஆனாலும் மஞ்சிமாவின் நடிப்பு நன்கு கவனிக்கப்பட்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அது மட்டுமின்றி அவரது எடை கூடி கொண்டே போனதால் இயக்குனர்கள் அவரை ஹீரோயினாகவும் விரும்பவில்லை. சத்ரியன் போன்ற சில படங்களில் நடித்தார் அவையும் ஓடவில்லை.

இந்நிலையில் இப்பொழுது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்து வருபவருக்கு புதிதாக ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. பாலகிருஷ்ணா நடித்து வரும் என்.டி.ஆர் படத்தில் க்ரிஷ் இயக்கத்தில் நடிக்க மஞ்சிமாவுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர் பாலையாவுக்கு மகளாகவும் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணா டகுபடிக்கு மனைவியாகவும் நடிக்க உள்ளார்