

அத்தனைக்கும் காரணம் நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளது தான். மேலும் இந்த படத்தில் அனிருத்தின் இசையில் வந்த பாடலான கல்யாண வயசு பாடல் ஹிட்டானதும் இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்தது. படம் வெளியாகி இப்பொழுது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

நயன்தாராவின் நடிப்பு மற்றும் யோகி பாபுவின் காமெடிக்கு அனைவரும் கைதட்டி ரசித்து பாராட்டி கொண்டுள்ளனர். இந்நிலையில் படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் 3.47 கோடிகள் வசூல் செய்ததை தொடர்ந்து இரண்டாம் நாள் 3.6 கோடிகளை குவித்து முதல் நாளை மிஞ்சியுள்ளது. இவ்வாறாக நயன்தாராவின் வெற்றி பாதையில் இன்னும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது கோலமாவு கோகிலா.