

இவரது நடிப்பு மட்டுமின்றி கொடை பண்பும் இண்டஸ்ட்ரியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மஹாநடி படம் முடிந்த போது பட குழுவினருக்கு தங்க காசுகள் பரிசளித்து மகிழ்ந்ததை போலவே சண்டக்கோழி டூ படம் முடிந்த பின்பும் பட குழுவினருக்கு அவர்களின் வேலையை பாராட்டி தங்க காசுகள் பரிசளித்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் கேரளா மழையாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த கீர்த்தி தனது பங்களிப்பாக பாத்து லட்சம் ரூபாய் காசோலையை கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்காக கொடுத்தார். மேலும் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக அவரே முன்னின்று வாங்கி அனுப்ப முயற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார் கீர்த்தி. கீர்த்தியின் இந்த பரந்த மனமும் உதவும் குணமும் திரை துறையில் அனைவராலும் பாராட்ட பட்டு வருகிறது.