

அவ்வப்பொழுது தனது காதலர் மைக்கேல் கார்செலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்கள் என்று செய்தியில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது தந்தை கமல் ஹாசனுடன் இனைந்து நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில் இந்திய பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்வதாகவும் தனக்கு இந்த தேசம் அணைத்து பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த நியூயார்க் இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேச பற்று பாடலைகளை பாடியதால் தான் பெருமையும் கர்வமும் கொள்வதாகவும் ஸ்ருதி ஹாசன் கூறினார்.