நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக திரைப்படங்களுக்கும் நுழைந்தார். முதலில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் அடுத்து கதாநாயகி ஆனார். ரம்மி தர்மதுரை பண்ணையாரும் பத்மினியும் என பெரும்பாலும் இவருக்கு அமைந்த வேடங்கள் எல்லாமே கிராமத்து பெண் கதாபாத்திரங்களே ஆகும்.

Related image

இந்நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு வேறு மாதிரியான வாய்ப்புகளும் வேடங்களும் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், தனுஷின் வட சென்னை ஆகிய படங்களில் அமைந்துள்ளன. இவரது அடுத்த படமான கனா படத்தில் கிராமத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் ஒரு இளம் பெண்ணாக ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

Image result for aishwarya rajesh hot

இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. டீசரை கண்டா அனைவருமே ஐஸ்வர்யா நிஜ கிரிக்கெட் வீராங்கனையை போலவே பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து அசத்துவதை கண்டு ஆச்சர்யப்பட்டு போயிருக்கிறார்கள். கனா படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க சிவ கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.


Find out more: