

இந்த படத்தில் சூர்யா நந்தா கோபாலன் குமரன் என்ற அரசியல்வாதியாக நடித்துள்ளார். சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளனர். தீபாவளி அன்று வெளியாவதாக முதலில் இந்த படம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் செல்வராகவன் உடல்நிலை காரணமாக படம் ஷூட்டிங் தள்ளி போனது. ஆனாலும் சூர்யா ரசிகர்கள் படம் தீபாவளிக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளரே அறிவித்து விட்டதால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்