படமும் படு தோல்வி அடைந்தது. ஷூட்டிங்குக்கு வராமல் இருந்தார் பாத்ரூமில் இருந்து டப்பிங் செய்தார் என்று சிம்பு மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ஆனால் அந்த படத்திற்கு பின்னர் சிம்புவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுப்பது அரசியல் விவகாரங்களில் கருது தெரிவிப்பது என கலக்க ஆரம்பித்தார்.
மணிரத்னத்தின் அடுத்த படமான செக்க சிவந்த வானம் படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியாக சென்று விரைவாக தனது பகுதியை முடித்தும் கொடுத்தார். இந்நிலையில் இன்று நடந்த செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் அனைவரையும் மேலும் ஆச்சர்ய படுத்தினார்.
வேஷ்டி சட்டையில் தமிழ் பண்பாட்டின்படி வந்திருந்த அவர் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்க பட்டது. ஆனால் அவரோ மைக்கை வாங்கி வெறும் நன்றி என்று மட்டும் கூறிவிட்டு நான் பேச விரும்பவில்லை படம் பேசும் என்று கூறிவிட்டு படம் வெளியான பின்னர் நிறைய பேசுகிறேன் என்று கூறி சிம்பு அனைவரையும் ஆச்சர்ய பட வைத்தார். பார்க்கலாம் சிம்புவின் மாற்றம் படத்துக்கு உதவுமா என்று.